டெல்லியின் மெஹரோலி பகுதியில் இருக்கும் குதுப் மினார் அருகே குவ்வத்தூல் இஸ்லாம் (இஸ்லாத்தின் சக்தி) எனும் பெயரிலான மசூதி ஒன்று உள்ளது. இந்த மசூதி 27 ஹிந்து கோயில்களை இடித்துவிட்டு கட்டப்பட்டதாக ஹிந்து அமைப்பினர் பல ஆண்டுகளாகப் புகார் கூறி வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாகவும் டெல்லி நீதிமன்றங்களில் பா.ஜ.க. உள்ளிட்ட பல்வேறு ஹிந்து அமைப்புகள் வழக்குத் தொடுத்திருக்கின்றன. இந்நிலையில், குதுப் மினார் வளாகத்தில் உள்ள குவாத் உல் இஸ்லாம் மசூதியின் கழிவு நீர் ஓடையின் தரை மட்டத்திற்கு அருகில் இரண்டு விநாயகர் சிலைகள் உள்ளன. இது அவமரியாதையாகக் கருதப்படுகிறது. இந்த இரண்டு விநாயகர் சிலைகளையும் மீட்டு தேசிய அருங்காட்சியகத்தில் வைக்கக் கோரி தேசிய நினைவுச் சின்னங்கள் ஆணையம் இந்திய தொல்லியல் துறையை அணுகியுள்ளது.