சிறுபான்மையினருக்கு இலவச பயிற்சி

சீக்கியர், ஜெயின், முஸ்லிம், கிறிஸ்தவர்கள், பௌத்தம் மற்றும் பார்சி இனத்தை சேர்ந்தவர்கள் தொழில்நுட்ப கல்வி, தொழில் கல்விக்கான மாணவர் சேர்க்கை, மற்றும் அரசு, தனியார் துறை வேலை வாய்ப்புகளுக்கான போட்டித் தேர்வில் பங்கேற்க ‘நயா சவேரா’ திட்டத்தின் கீழ் இலவச பயிற்சிகளை சிறுபான்மையினர் விவகாரத்துறை அமைச்சகம் அளிக்கிறது. தொண்டு நிறுவனங்கள், மற்றும் திட்டங்களை அமல்படுத்தும் முகமைகள் (பி.ஐ.ஏ) மூலம் இப்பயிற்சிகள் நாடு முழுவதும் அளிக்கப்படுகின்றன. ‘நயா சவேரா திட்டம்’ அமல்படுத்தப்பட்டதிலிருந்து சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த 1,19,283  மாணவர்களுக்கு இலவச பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை அமல்படுத்துவதற்காக 130 திட்ட அமலாக்க குழுக்களை மத்திய அமைச்சகம் கடந்த 2017 – 18ம் ஆண்டு உருவாக்கியது. இந்த நிதியாண்டில் நயா சவேரா திட்டத்தின் கீழ் பயிற்சி வகுப்புகளை நடத்த 37 அமைப்புகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. 2021 – 22ம் நிதியாண்டில் நவம்பர் 30ம் தேதி வரை திட்டத்தை அமல்படுத்தும் முகமைகளுக்கு (பி.ஐ.ஏ) ரூ.13.53 கோடி வழங்கப்பட்டுள்ளது என என மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி தெரிவித்தார்.