தற்சார்பு பாரதம் எனும் தொலைநோக்குத் திட்டத்தை மேலும், தீவிரப்படுத்தவும், மின்னணு சாதனங்கள் வடிவமைப்பு மற்றும் உற்பத்திக்கான உலகளாவிய மையமாக பாரதத்தை நிலை நிறுத்தவும் நீடித்து உழைக்கவல்ல ‘சிப்’ எனப்படும் ‘செமி கண்டக்டர்’ மற்றும் ‘காட்சிப்படுத்தும் மின்னணு சாதனங்கள்’ உற்பத்திச் சூழலை மேம்படுத்த விரிவானத் திட்டத்திற்குப் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஒட்டுமொத்தமாக செமி கண்டக்டர்களை அடித்தளமாகக் கொண்டு மின்னணு சாதனங்கள் உற்பத்திக்கான குவி மையமாக பாரதத்தை நிலைநிறுத்த ரூ. 2,30,000 கோடி நிதியுதவி வழங்க மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது. அதன் முதல்கட்டமாக, உற்பத்தியுடன் இனைந்த ஊக்கத்தொகையாக ரூ.76,000 கோடி ஒதுக்கீட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.