போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், வானில் பறக்கும் இ-டாக்ஸியை வடிவமைக்க சென்னை ஐ.ஐ.டி திட்டமிட்டு அதற்காக ‘தி இ-பிளேன் கம்பெனி’ என்ற நிறுவனத்தையும் நிறுவியது. ஐ.ஐ.டி பேராசிரியரும், தி இ-பிளேன் நிறுவன தலைமை தொழில்நுட்ப அதிகாரியுமான சத்ய சக்கரவர்த்தி இது குறித்து கூறுகையில், ‘சிறிய விமான வடிவிலான இ-டாக்ஸியை சென்னை ஐ.ஐ.டி வடிவமைத்துள்ளது. பேட்டரி மூலம் இயங்கும் இந்த இ-டேக்ஸியில் 2 பேர் பயணிக்க முடியும். இது 200 கிலோ எடையை சுமந்தபடி மணிக்கு 200 கி.மீ. வேகத்தில் பறக்கும் திறன் கொண்டது. இந்த இ-டேக்ஸியின் சோதனை ஓட்டம் வரும் ஜூலையில் நடக்க உள்ளது. 2022ல் இது முழு வடிவம் பெற்று பயணிகளை ஏற்றிச் செல்லத் தயாராகிவிடும். நடைமுறைக்கு வரும்போது இதன் வாடகை, வழக்கமான கால்டாக்ஸியைவிட 2 மடங்கு மட்டுமே அதிகம் இருக்கும்’ என தெரிவித்தார்.