பா.ஜ.கவில் இணைந்த மீனவர்கள்

நாகர்கோவில் வடசேரியில், பா.ஜ.க மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை தலைமையில், சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராகிம் அவர்கள், மாநில துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன், எம்.எல்.ஏ எம்.ஆர். காந்தி ஆகியோர் முன்னிலையில், சகாயம் என்பவரின் சீரிய முயற்சியில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிறித்தவ மீனவ சமுதாய மக்கள் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தனர். ‘மதத்தின் பெயரால் பிரிவினை செய்து அரசியல் ஆதாயம் தேடும் கட்சிகளை அடையாளம் கண்டு, தேசம் காக்க தேடி வந்திருக்கும்  சிறுபான்மைச் சொந்தங்களை சகோதர பாசத்துடன் வரவேற்கிறேன்’ என அண்ணாமலை குறிப்பிட்டார்.