முஸ்லிம் ராஷ்டிரிய மஞ்ச் (எம்.ஆர்.எம்) என்பது முஸ்லீம் சமூகத்தில் உள்ள சமூக சீர்திருத்தங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு அரசியல் சார்பற்ற அமைப்பாகும். இது முஸ்லிம்களின் அனைத்து தரப்பு வளர்ச்சி, பெண்களுக்கு அதிகாரம் அளித்தல், கல்வி, சுகாதரம், முஸ்லீம் சமூகத்தை பாரதத்தின் தேசிய நீரோட்டத்துடன் இணைத்தல் போன்ற பல பணிகளை செய்து வருகிறது. இந்த அமைப்பு, உத்திரப் பிரதேசம், உத்தரகண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளுக்குச் சென்று முஸ்லிம் வாக்காளர்களிடம் பா.ஜ.கவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய முடிவு செய்து களமிறங்கி உள்ளது. இப்பணியில் நூற்றுக்கணக்கான முஸ்லிம் ராஷ்டிரிய மஞ்ச் செயல்பாட்டாளர்கள், பெண்கள், மூத்த நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளனர். மூத்த ஆர்.எஸ்.எஸ் தலைவரும், எம்.ஆர்.எம் அமைப்பின் புரவலரும் வழிகாட்டியுமான இந்திரேஷ் குமார் பல்வேறு இடங்களில் சிறுபான்மை சமூக உறுப்பினர்களுடன் கூட்டத்தில் பங்கேற்று பேசி வருகிறார். இந்த அமைப்பு, கடந்த 2014ல் ‘மிஷன் மோடி 2014’ என்ற பிரச்சார திட்டத்தின் கீழ் இது போன்ற கூட்டங்களை நாடு முழுவதும் நடத்தியது குறிப்பிடத்தக்கது.