ஜார்கண்ட், கர்வா மாவட்டத்தில் உள்ள பழங்குடி கிராமங்களான, விஷ்ராம்பூர் கோரையப்கர் கிராமத்தைச் சேர்ந்த 18 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 104 பேர், குந்தி டோலா கராச்சாலி கிராமத்தைச் சேர்ந்த 7 குடும்பங்களைச் சேர்ந்த 42 பேர் மற்றும் மஹாங்காய் கிராமத்தைச் சேர்ந்த 8 குடும்பங்களைச் சேர்ந்த 35 பேர்கள் என மொத்தம் 181 கிறிஸ்தவர்கள், தங்கள் தாய் மதமான ஹிந்து மதத்தின் ‘சர்னா’ பிரிவிற்கு மீண்டும் திரும்பியுள்ளனர். இதற்கு, தர்ம ஜாக்ரன் மற்றும் பழங்குடி சுரக்ஷா மஞ்ச் அமைப்புகள் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தன. தாய் மதம் திரும்பியவர்களை இந்த அமைப்பினர் பாதபூஜை செய்து வரவேற்றனர். இந்நிகழ்ச்சியில் அகில இந்திய வனவாசி கல்யாண் ஆசிரமம், பழங்குடியினர் பாதுகாப்பு மன்றம், தர்ம ஜாக்ரன் அமைப்புகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர்.