பா.ஜ.க மூத்த தலைவரும், முன்னாள் லோக்சபா சபாநாயகருமான சுமித்ரா மகாஜன் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார் அவரது ஆத்மா சாந்தியடையட்டும் என காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சசிதரூர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதனையடுத்து சரத்பவார், சுப்ரியா சுலே உள்ளிட்ட பல பிரபலங்களும் பொதுமக்களும் வருத்தம் தெரிவித்து இரங்கல் செய்திகள் பதிவிட்டனர். இதனையறிந்த பா.ஜ.க தேசிய பொதுச்செயலாளர் கைலாஷ் விஜய்வர்க்கியா, சுமித்ரா நலமுடன் இருக்கிறார், கடவுள் அவரை நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ ஆசிர்வதிப்பார் என பதிலளித்தார். இதனையடுத்து, சுமித்ரா மகாஜன் இறந்ததாக தான் பதிவிட்ட டுவிட்டை அவசர அவசரமாக நீக்கிய சசிதரூர், ‛நன்றி கைலாஷ் ஜி. எனது ட்வீட்டை நீக்கிவிட்டேன். இது போன்ற தவறான செய்திகளை பரப்ப தீயவர்களை எது தூண்டுகிறது என நினைக்கும் போது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. சுமித்ரா ஜி உடல் நலத்துடன் நீண்ட காலம் இருக்க வேண்டும்’ என பதிவிட்டார்.