- மகாராஷ்டிரம், தமிழ்நாடு, உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களிலிருந்து ஜம்மு காஷ்மிர் எந்த விதத்தில் வித்தியாசமானது. அதற்கு மட்டும் எதற்காக 370 விதியின்படி தனி அந்தஸ்து வழங்கப்பட வேண்டும்?
- காந்திஜி எதற்காக கிலாபத் இயக்கத்தை ஆதரித்தார்? (இதற்கும் இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது) அதற்குக் கைமாறாக அவருக்கு என்ன கிடைத்தது?
- ஜனவரி 1948ல் டில்லியில் உள்ள மசூதிகளை அரசாங்கமே புனரமைக்க வேண்டும் என்று நேருவையும் பட்டேலையும் வலியுறுத்திய காந்திஜி, சோமநாதர் கோவில் அரசாங்கப் பணத்தின் மூலம் கட்டப்பட வேண்டும் என்ற மத்திய அமைச்சரவை முடிவை எதிர்த்து, அது பொதுமக்கள் பணத்தால்தான் கட்டப்பட வேண்டும் என்று ஏன் தெரிவித்தார்?
- மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில் முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் சிறுபான்மையினர் என்றால் மிசோரம், நாகாலாந்து, அருணாச்சலப்பிரதேசம், மேகாலயா போன்ற மாநிலங்களில் இந்துக்கள் சிறுபான்மையினர் தானே? அவர்களுக்கு இந்த மாநிலங்களில் சிறுபான்மையினருக்கான சலுகைகள் ஏன் வழங்கப்படவில்லை?
- இந்துக்களிடம் ஏதோ பிரச்னை இருக்கிறது. அது உணரப்படவேண்டும் என்று கருதுகிறீர்களா? அல்லது இந்துக்கள் என்று தங்களைக் கூறிக் கொள்பவர்கள் தான் பிரச்னையே என்று எண்ணுகிறீர்களா?
- கோத்ராவிற்குப் பிறகு நடந்தவற்றைப் பத்திரிகைகளில் மிகைப்படுத்தி கூறுகிறார்களே. காஷ்மீரில் நான்கு இலட்சம் இந்துக்கள் அழிக்கப்பட்டு, துரத்தப்பட்டுள்ளனரே அது பற்றி ஏன் யாருமே பேசுவதில்லை?
- 1947இல் இந்தியா பிரிக்கப்பட்ட போது பாகிஸ்தானில் இந்துக்களின் எண்ணிக்கை 24%. தற்போது வெறும் 1%. கிழக்கு பாகிஸ்தானில் (தற்போதைய பங்களாதேஷ்) இந்துக்களின் எண்ணிக்கை 30%, தற்போது 7%. எங்கே போனார்கள் மீதி இந்துக்கள்? இந்துக்களுக்கு மனித உரிமைகள் எதுவுமில்லையா?
- ஆனால் இந்தியாவின் நிலை என்ன? 1951இல் 10.4%மாக இருந்த முஸ்லிம்களின் ஜனத்தொகை தற்போது 14%மாக உயர்ந்துள்ளது. அதேசமயம், இந்துக்களின் ஜனத்தொகை 87.2%லிருந்து 81.5%மாகக் குறைந்துள்ளது. எந்த அரசியல்வாதிக்காவது முஸ்லிம்களிடம் குடும்பக் கட்டுப்பாட்டை வலியுறுத்தும் தைரியமுள்ளதா?
- சமஸ்கிருதம் – மதவாதம், உருது – மதச்சார்பற்றது. கோயில் – மதவாதம், மசூதி – மதச்சார்பற்றது. துறவி – மதவாதி, இமாம் புகாரி – தேசப்பற்று மிக்கவர். பா.ஜ.க. – மதவாதக்கட்சி, முஸ்லிம்லீம் லீக் – மதச்சார்பற்ற கட்சி. டாக்டர் பிரவீண் தொகாடியா – தேசவிரோதி, புகாரி – தேச பக்தர். வந்தேமாதரம் – மதவாதம், அல்லா ஹு அக்பர் – மதச்சார்பற்றது. ஸ்ரீ ராமர் – மதவாதி, மியான் – மதச்சார்பற்றவர்; இந்துமதம் – மதவாதம், இஸ்லாம் – மதச்சார்பற்றது. இந்துத்துவம் – மதவாதம், ஜிகாத் – மதச்சார்பற்றது. கடைசியாக, பாரதம் – மதவாத நாடு,
இத்தாலி – மதச்சார்பற்ற நாடு என்று நீங்கள் ஒத்துக் கொள்கிறீர்களா?
- அரசு பணத்தில் நடக்கும் கிறிஸ்தவ – முஸ்லிம் பள்ளிகள் பைபிளையும், குரானையும் கற்றுத் தரலாம் என்றால் அரசு பள்ளிகளில் இந்துக்களுக்கு ஏன் கீதையையும், ராமாயணத்தையும் சொல்லித்தரக்கூடாது?
தொடரும்…