தெற்கு டெல்லியில் ஜமியா நகரில் கடந்த 2008ல் பட்லா ஹவுஸ் பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளுக்கும் காவல்துறையினருக்கும் நடந்த துப்பாக்கிச்சூட்டில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஆரிஸ்கான் எனும் பயங்கரவாதி தப்பியோடினான். இதில் காவல் அதிகாரி மோகன் சர்மா பலியானார். நேபாள எல்லையில் இவன் கைதானான். இந்த வழக்கை விசாரித்த டெல்லி செசனஸ் நீதிமன்றம், குற்றவாளி ஆரிஸ் கானுக்கு மரண தண்டனை விதித்தது. 2008ல், இச்சம்பவத்தின்போது அந்த பயங்கரவாதியை காப்பற்ற பல கட்சியினர் நாடகமாடினர். காங்கிரசின் திக் விஜய் சிங், இது போலி என் கவுண்டர் என்றார். சோனியா அந்த புகைப்படங்களை பார்த்து அழுததாக சல்மான் குர்ஷித் கூறினார். மேலும், ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், சமாஜ்வாதி முலாயம் சிங், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, இடதுசாரி தலைவர்கள் என அனைவரும் பயங்கரவாதிகளை, நிரபராதிகள் என்றனர். மமதா பேனர்ஜி, அவர்கள் பயங்கரவாதிகள் கிடையாது. அப்படி நிரூபிக்கப்பட்டால் நான் அரசியலைவிட்டே விலகுவேன் என சவால் விட்டார். இந்நிலையில், பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக நாடகமாடிய இந்த போலி அரசியல்வாதிகளின் சாயம் தற்போது வெளுத்துவிட்டது.