சர்வதேச அளவில் மோசமான பெயர் எடுத்த நாடுகள் வரிசையில் கம்யூனிச கொடுங்கோல் ஆட்சி நடக்கும் சீனாதான் அதில் முதலிடத்தில் இருக்கும். சமீபத்திய கொரோனா பிரச்சனை, எல்லை பிரச்சனைகளால் அதன் பெயர் அதளபாதாளத்தில் போய்விட்டது. இந்நிலையில், தனது பெயரை மீட்டெடுக்க சமூக ஊடகங்களில் பல போலி கணக்குகளை சீனா துவங்கி தங்களை குறித்து நல்ல விதமாக போலி பதிவுகளை இட்டு வருகிறது என இது குறித்து கடந்த 7 மாதங்களாக ஆய்வு செய்து வரும் அசோசியேட் பிரஸ், ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் இணையதள பிரிவுகள் தெரிவித்துள்ளன. எவ்வளவு கணக்குகளை முடக்கினாலும் மீண்டும் புதிதாக போலி கணக்குகளை சீனா உருவாக்கி வருவதாக இந்த அமைப்புகள் குற்றம்சாட்டியுள்ளன.