பொதுமக்கள் கொரோனா தடுப்பூசி முகாம்கள் குறித்து எளிதாக கண்டறியும் வகையில், மத்திய அரசுடன் இணைந்து புதிய வசதியை உருவாக்க உள்ளதாக முகநூல் நிறுவனம், தெரிவித்துள்ளது. அந்த வசதி தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உள்ளிட்ட 17 மொழிகளில் இருக்கும் என தெரிவித்துள்ளதுடன் கொரோனா அவசரகால உதவியாக ஒரு கோடி டாலர் நிதியுதவி வழங்க உள்ளதாகவும் முகநூல் நிறுவனம் தெரிவித்துள்ளது.