ஈ.வெ.ராமசாமி நாயக்கருக்கு ‘தெற்காசியாவின் சாக்ரடீஸ்’ என்ற பட்டம் யுனெஸ்கோவால் வழங்கப்பட்டதாக பள்ளி, கல்லூரி பாட புத்தகங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. யுனெஸ்கோவின் தெற்காசிய நாடுகள் பட்டியலில் பாரதத்தின் பெயர் இல்லை என்பதால் இந்த பொய்யான தகவலை பாடப்புத்தகங்களில் இருந்து நீக்க வேண்டும் என்று முகமது ரிஸ்வி என்பவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார். மேலும் திராவிடர் கழகத்தைப் பற்றி குறிப்பிட்ட அவர், ஹிந்து கடவுள்களை பற்றி இழிவாகப் பேசி திராவிட அமைப்புகள் ஹிந்து விரோத செயல்களில் ஈடுபடுகின்றன. சாதி, மத ரீதியான பிரிவினையை ஏற்படுத்தி தேச நலனுக்கு பங்கம் விளைவிக்கின்றன. இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தவறுவது நாட்டின் ஒருமைப்பாட்டை பாதிக்கும் என்றும் எடுத்துக் கூறியுள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அமர்வு, இது குறித்து ஆய்வு செய்து 12 வாரங்களுக்குள் தக்க நடவடிக்கை எடுக்குமாறு பாடநூல் வடிவமைப்பு குழுக்களுக்கு உத்தரவிட்டது.