இந்திய பெருங்கடலில் மொரீசியஸ் நாட்டிற்கு அருகே அமைந்துள்ள தீவு தேசமான செசல்ஸ் நாட்டின் மொத்த மக்கள் தொகை 98 ஆயிரம். இதில் 61.4 சதவீத மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.சுற்றுலாவை சார்ந்தே அந்நாட்டின் 72% வருமான என்பதால், ஒரு மாதத்திற்கு முன்பு சுற்றுலாப் பயணிகளுக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. கோவிட் நெகடிவ் டெஸ்ட் முடிவுகளுடன் வருபவர்களை தனிமைப்படுத்தாமல் அனுமதித்தது. தற்போதுஅங்கு கொரோனா தொற்றுக்குள்ளாவோர் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.செசல்ஸ் மக்கள் தொகையில் 57% மக்களுக்கு சீனாவின் சினோபார்ம் மற்றும் 43% மக்களுக்குஇந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவிஷீல்டு போடப்பட்டுள்ளது. சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் சுமார் 20% பேர் தடுப்பூசி போட்டவர்கள். ஆனால் அவர்களுக்கு தீவிர பாதிப்பு ஏற்படவில்லை, தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் யாரும் இறக்கவில்லை என்று அந்நாட்டு சுகாதார அமைச்சகம் கூறியிருக்கிறது.