இ சந்தையின் புதிய அம்சங்கள் மற்றும் செயல்பாடுகள் பற்றிய விழிப்புணர்வுக்காக விற்பனையாளர்கள் கலந்துரையாடல் நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 2022 செப்டம்பர் 14 முதல் 23 வரை நாட்டின் பல்வேறு பகுதிகளில் இந்த கலந்துரையாடல் நிகழ்வுகள் நடைபெற உள்ளன. தேசிய அளவிலான கொள்முதல் இணைய பக்கமாக அரசு இ சந்தை விளங்குகிறது. திறன், வெளிப்படைத்தன்மை, அனைவரையும் ஈடுபடுத்துதல் என்ற 3 நோக்கங்களுடன் செயல்படும் இந்த இ சந்தை நேரடி தொடர்பு, காகிதம், ரொக்கம், நிலை அடுக்குகள், இல்லாதது என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை மொத்தம் ரூ. 2.82 லட்சம் கோடி மதிப்புள்ள ஒரு கோடிக்கும் அதிகமான பரிவர்த்தனைகள் இ சந்தை மூலம் நடைபெற்றுள்ளன. கடந்த நிதியாண்டில் மட்டும் கொள்முதல் மதிப்பு ரூ. 1 லட்சம் கோடியை கடந்திருப்பது இதன் செயல்பாட்டில் ஒரு மைல் கல்லாகும். 2016 ஆகஸ்ட் 9 அன்று இ-சந்தை தொடங்கப்பட்டதிலிருந்து இதன் மூலம் விற்கப்படும், கொள்முதல் செய்யப்படும் பொருட்களின் எண்ணிக்கை அதிகரித்து தற்போது 10 ஆயிரத்துக்கும் அதிகமாக உள்ளன. இந்நிலையில், விற்பனையாளர்கள் தங்களின் அனுபவங்கள் குறித்து பேசுவதற்கும், மற்றவர்களிடமிருந்து கற்பதற்கும் இவற்றின் மூலம் ஊக்கம் பெறுவதற்கும் இந்த கலந்துரையாடல் நிகழ்வுக்கு திட்டமிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் நடைபெறவுள்ள இந்த கலந்துரையாடலின் தொடக்க நிகழ்வுகள் செப்டம்பர் 14 அன்று புனே, இம்பால், ஜம்மு ஆகிய இடங்களில் நடைபெற்றன. தேசம் முழுவதும் மொத்தம் 29 இடங்களில் நடைபெறும் கலந்துரையாடலின் ஒரு பகுதியாக சென்னையில் செப்டம்பர் 21 அன்றும், நிறைவாக செப்டம்பர் 23 அன்று வாரணாசியிலும் கலந்துரையாடல் நடைபெறும்.