காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளரும், ராகுல் காந்தியின் நண்பருமான சாகேத் கோகலே, எப்.சி.ஆர்.ஏ விதிமுறைகளை மீறி சட்டவிரோதமாக வெளிநாட்டு நிதியைப் பெற்று அதனை போதைப்பொருட்கள் வாங்க பயன்படுத்துவதாக, சட்ட உரிமைகள் ஆய்வகம் (எல்.ஆர்.ஓ) போதைப்பொருள் கட்டுப்பாட்டு அமைப்பில் (NCB) புகார் அளித்துள்ளது. மேலும், சாகேத் கோகலேவுக்கு அளிக்கப்படும் வெளிநாட்டு நன்கொடைகளில் விவசாய சட்டத்திற்கு எதிராக போராடும் காலிஸ்தான் பயங்கரவாதிகளின் பணம் இருக்க வாய்ப்புள்ளது, இதில் அவர் வருமான வரி ஏய்ப்பு செய்திருக்கவும் அதிக சாத்தியக்கூறுகள் உள்ளன. எனவே இது குறித்து விசாரிக்க வேண்டும் என வருமானத்துறையிடமும் கோரிக்கை வைத்திருந்தது. இவர் ஒரு மோசடிக்காரர் என்று இடதுசாரிகள், ஆம் ஆத்மி கட்சியினரேகூட குற்றம் சாட்டியுள்ளனர். சாகேத் கோகலேவின் தந்தை ஒரு முன்னாள் காவல்துறை அதிகாரி. அவர் 2015ல் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.