திருப்பத்தூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் அரசு உயர் அதிகாரிகள் கூட்டம் நடைபெற்றது. அப்பொழுது அதிகாரிகளிடம் எ.வ.வேலு, “பிரஸ்ஸில் இரண்டு வகை உண்டு. ஒன்று அவன் ஸ்டில் போட்டோகிராபர், டி.வியில் ஒரு இடம் தனக்கு இருக்க வேண்டும் என நினைப்பான். இன்னொன்று ரிப்போர்டிங் பண்றவன் இன்னொரு இடம் நிற்பான். அவனுக்கு வேறு இடம் தரவேண்டும், இவனுக்கு வேற ஒரு இடம் தர வேண்டும். ரிப்போர்டிங் பண்றவனை எங்க வேணாலும் உட்கார வைக்கலாம். சைடில்கூட உட்கார வைக்கலாம். ஆனால், இந்த கேமரா வைத்து இருப்பவன் மட்டும் ஆங்கிள் பார்ப்பான். இந்த ஆங்கிளில் தான் வேண்டும் என சொல்வான்” என பேசியுள்ளார். பத்திரிக்கையாளர்களை பலமுறை அவன், இவன் என அமைச்சர் எ.வ.வேலு ஒருமையில் பேசியிருப்பதற்கு பொதுமக்கள் கண்டனம் தெரிவித்தாலும், இதுகுறித்து எந்த பத்திரிக்கையாளர்கள் சங்கமும் இதுவரை வாய் திறக்கவில்லை.