வன்னியர்களுக்கான உள் ஒதுக்கீட்டை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர ‘இசை வேளாளர் இளைஞர் பேரவை’ முடிவு செய்துள்ளது. திருச்சியில் நடந்த இப்பேரவையின் ஆலோசனைக் கூட்டத்தில், அந்த அமைப்பின் நிறுவனர் தலைவர் கே.ஆர்.குகேஷ் தலைமையில், கருணாநிதியின் உதவியாளராக இருந்த ‘கே.நித்தியானந்தம்’, தி.மு.க திருச்சி தெற்கு மாவட்டப் பொறுப்பாளரும் சட்ட மன்ற உறுப்பினருமான ‘அன்பில் மகேஷ் பொய்யாமொழி’ உள்ளிட்டோர் கலந்து கொண்டு இந்த தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளனர். மேலும், தமிழகத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் பட்டியலில் 109 ஜாதிகள் உள்ளன. இந்நிலையில், யாரையும் கலந்தாலோசிக்காமல் வாக்கு வங்கிக்காக அ.தி.மு.க அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இசை வேளாளர்கள் பாதிக்கப்படாத வகையில் உள் ஒதுக்கீடு அமைக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.