கோவை மாவட்டம், பேரூர் பட்டீஸ்வரம் திருக்கோயில் தேர் விழா ஆண்டுதோறும் விமரிசையாக நடைபெறும். இத்திருவிழாவின்போது, தி.மு.கவை சேர்ந்த ஞானவேல், மற்றும் 6வது வார்டு கவுன்சிலர் மோகன் உள்ளிட்டோர் போலி ரசீதுகள் அச்சடித்து அங்குள்ள கடைக்காரர்களை மிரட்டி தலா ரூ. 200 வசூலித்துள்ளனர். இது குறித்து கேட்டவர்களிடம், ஹிந்து அறநிலையத்துறை அமைச்சர் எங்கள் கட்சிக்காரர். அவர் நாங்கள் சொல்வதைத்தான் கேட்பார் என கூறி அடாவடி செய்துள்ளனர். மேலும், பார்க்கிங் கட்டணம் வசூலிக்க ஏலமே விடப்படாத சூழலில், தி.மு.கவினர் அதிலும் வசூல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், இதுகுறித்துத் தெரிந்தும் பேரூர் பேரூராட்சித் தலைவர் அண்ணாதுரையும் இவற்றை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார் என குற்றம் சாட்டப்படுகிறது. இதனை தி.மு.க தலைமை உரிய வகையில் விசாரித்து தவறு செய்தவர்களை களையெடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.