மருத்துவ உதவிகள் பகிர்ந்தளிப்பு

அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து கொரோனா தடுப்பு மருந்துகள், ஆக்சிஜன் கான்சென்ட்ரேட்டர்கள், சிலிண்டர்கள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் பாரதத்திற்கு நல்லெண்ண அடிப்படையில் வழங்கப்பட்டு வருகின்றன. ‘வெளிநாடுகளில் இருந்து வரும் இந்த பொருட்களை மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கும் பணியை மத்திய அரசு செய்து வருகிறது. இதுவரை 31 மாநிலங்களில் உள்ள 38 அரசு மருத்துவமனைகள், சுகாதார நிலையங்களுக்கு அனைத்து உதவி பொருட்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அனைத்து மாநிலங்களுக்கும் இந்த மருத்துவ உபகரணங்கள் பாரபட்சமின்றி சமமாக வழங்கப்படுவதை உறுதி செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வந்துள்ள ஆக்சிஜன் செறிவூட்டிகள் சுங்கத் துறை அனுமதிக்காக காத்திருப்பதாக ஊடகங்களில் வெளியான செய்திகளில் உண்மை இல்லை. வெளிநாடுகளில் இருந்து இதுவரை 3,000 ஆக்சிஜன் செறிவூட்டிகள் வந்துள்ளன. அவற்றுக்கு சுங்கத்துறை உடனடியாக அனுமதி அளித்துள்ளது’ என மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.