சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சி, வி.வி குழும நிறுவனத்திற்கு சொந்தமானது. கிறிஸ்தவ மதமாற்ற அழுத்தத்தால் தற்கொலை செய்துகொண்ட அரியலூர் மாணவி லாவண்யாவின் வழக்கை சி. பி. ஐ விசாரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக சி.பி.ஐ அதிகாரிகள் தஞ்சையில் முகாமிட்டு நேரடி விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், மாணவியின் மரணத்திற்கு மதமாற்றம் காரணம் இல்லை என நியூஸ் 7 ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், மாணவியின் பெற்றோர், சகோதரருக்கு மனநல ஆலோசனை வழங்க வேண்டும் என தேசிய குழந்தைகள் நல ஆணையம் அறிக்கை வெளியிட்டதாக கூறப்பட்டுள்ளது. பள்ளி மீது, முறையாக விசாரணை செய்யாத காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்த குழந்தைகள் நல ஆணையம், காவல்துறையால் கடும் மன உளைச்சலில் இருக்கும் அந்தக் குடும்பத்தினரை சகஜ நிலைக்கு கொண்டு வர கௌன்சிலிங் கொடுக்க வேண்டும் என்ற வார்த்தையை தவறாக வெளியிட்டுள்ளது. தவறான செய்தி வெளியிட்ட நியூஸ் 7 தமிழ் ஊடகத்தின் மீது சட்ட உரிமைகள் பாதுகாப்பு மன்றத்தின் சார்பில், பத்திரிகை தகவல் அலுவலகத்தில் (PIB) குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. டுவிட்டர் நிறுவனத்திற்கு இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டு கணக்கை முடக்கவும் கோரப்பட்டு உள்ளது.