ஒப்பந்தத்தை மதிக்காத சீனா

2018ல் வாட்டிகனுடன் செய்த உடன்படிக்கையில் இருந்து விலகிச் செல்வதன் மூலம், சீனா தனது சிறுபான்மை சமூகங்களின் நலன்கள் மீதான அதன் உண்மை முகத்தை மீண்டும் காட்டியுள்ளது. சீன கிறிஸ்தவர்களுக்கான ஆயர் நியமனம் குறித்த போப், சீன அதிகாரிகளுடன் பல வருடங்களாக கருத்து வேறுபாடுகள் நிலவியது. இதனை முடிவுக்கு கொண்டுவர புதிய ஒப்பந்தம் ஒன்று போடப்பட்டது. ஒப்பந்தம் நடைபெற்ற சில நாட்களிலேயே சீனா அதனை கிடப்பில் போட்டுள்ளது. மத விவகாரங்களுக்கான சீன நிர்வாகத்தால் இம்மாதம் வெளியிடப்பட்ட விதிமுறைகளில், ஆயர் நியமனத்தில் போப்பின் பங்கைப் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை.