உத்தர பிரதேசத்தில் உள்ள ஹிந்துக்களின் தெய்வீக நகரமான காசி எனப்படும் வாரணாசியில் தனியாக வாழும் மூத்த குடிமக்களும், சாதுக்களும் அதிகம். இவர்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் வீடுகளிலேயே தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்கின்றனர். இதனால், அவர்களில் பலருக்குக் குறித்த நேரத்தில் உணவு கிடைக்காத சூழல் நிலவுகிறது. அவர்களுக்கு உதவ அங்குள்ள சமூகசேவை மற்றும் தனியார் நிறுவனங்கள் முன்வந்துள்ளன. இதற்காக, அவர்களுக்கு இலவசமாக உணவு அளிக்க வேண்டி வாட்ஸ்அப் எண்களை வெளியிட்டுள்ளனர். தீன்தயாள் ஜலான் ரீடெய்ல், ஜலாஸ் குரூப், ஓ.எஸ்.பால் குந்தன் பவுண்டேஷன்ஸ் உள்ளிட்ட அமைப்புகள் இந்த தொண்டுப்பணியை செய்து வருகின்றன.