மும்பையில், கடந்த 2008ல் பாகிஸ்தான், லஷ்கர் – இ – தொய்பா பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 166 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர்களில் ஒருவன், கனடா குடியுரிமை பெற்ற பாகிஸ்தானியரான தஹாவூர் ராணா. அமெரிக்காவில் இருந்து ராணாவை, பாரதத்திற்கு நாடு கடத்த மத்திய அரசு கோரிக்கை வைத்தது. இந்த வழக்கு விசாரணை, லாஸ் ஏஞ்சலஸ் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவ்வழக்கில், அமெரிக்க அரசு, ராணாவை நாடு கடத்துவதற்கு தேவையான அனைத்து அம்சங்களும் உள்ளன. நாடு கடத்த உத்தரவிடலாம் என நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. எனவே ராணா விரைவில் கைது செய்யப்பட்டு பாரதத்திற்கு அழைத்துவரப்படலாம்.
இதேபோல, ராஜஸ்தானை சேர்ந்த சர்வதேச போதை மருந்து வியாபாரியான கிஷன் சிங்கை, இங்கிலாந்தில் இருந்து நாடு கடத்த பாரத அரசு நீண்ட சட்டப்போரட்டத்தை நடத்திவந்தது. இவ்வழக்கில் தற்போது, பாரதத்திற்கு சாதகமாக இங்கிலாந்து நீதிமன்றம் தீர்ப்பளித்ததையடுத்து அவன் பாரதத்திற்கு நாடு கடத்தப்படுகிறான். விரைவில் விஜய் மல்லையாவையும் நிரவ் மோடியையும் இதேபோல இங்கிலாந்து பாரதத்திடம் ஒப்படைக்கும் என எதிர்பார்க்கலாம்.