பாரதம், அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நான்கு நாடுகளின் ‘குவாட் நாடுகள் கூட்டமைப்பின் தலைவர்கள் கலந்துகொண்ட மாநாட்டில், இயற்கை வளம், எரிவாயுத் தொழில்நுட்பம், தாதுப் பொருட்கள் ஏற்றுமதி போன்றவற்றில் பொருளாதாரரீதியாக சீனாவைச் சார்ந்திராமல், தங்கள் நாட்டில் கிடைக்கும் கனிம வளம், தொழில்நுட்பம், உலோக வளங்களைப் பகிர்ந்துக் கொண்டு கார் உள்ளிட்ட பொருட்களின் தயாரிப்பில் ஈடுபடவேண்டும் என்பது உள்ளிட்ட பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.