ஆவின் பாலில் விடியல்

ஆவின் நிறுவனம், தற்போது சிகப்பு நிற பால் பாக்கெட் விற்பனை துவங்கப்பட்டு உள்ளது. இது 500 மி.லி. 30 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இந்த பால் விற்பனையை அதிகரிக்க ஏதுவாக 24 ரூபாய்க்கு விற்கப்படும் 500 மி.லி. ஆரஞ் நிற பால் பாக்கெட் தயாரிப்பை குறைக்க முடிவு செய்துள்ளதாகவும் தீபாவளி பண்டிகைக்கு பின் இந்த ஆரஞ்ச் நிற பால் பாக்கெட் தயாரிப்பை 80 சதவீதம் அளவிற்கு குறைக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதற்கு முன்னோட்டமாக ஆரஞ்ச் நிற பால் அட்டை விற்பனையை குறைத்துக்கொண்டு சிகப்பு நிற பால் அட்டையை அதிகளவில் பொது மக்களுக்கு வினியோகம் செய்ய ஆவின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. வரும் அக்டோபர் 15ம் தேதி முதல் இதை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இதனால் இனி அதிக விலை கொடுத்து பால் வாங்க வேண்டிய நிர்பந்தம் ஆவின் பால் நுகர்வோருக்கு ஏற்பட்டுள்ளது.