ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மூத்த தலைவரும் முஸ்லிம் ராஷ்டிரிய மஞ்ச் அமைப்பின் நிறுவனத் தலைவருமான இந்திரேஷ் குமார், மத மாற்றம் செய்வது சட்ட விரோதமானது, மனிதாபிமானமற்றது, அரசியலமைப்பிற்கு எதிரானது. இதனால் சமூகத்துக்கு சீர்கேடு ஏற்படும். மத மாற்றத்தால் சமூகத்தில் பிளவு, மோதல்கள் உருவாகின்றன. இதனால் நாட்டின் ஒற்றுமைக்கும், இறையாண்மைக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. மதமாற்றம் ஒரு பாவம், குற்றம் மற்றும் கடவுளுக்கு நேர்மையற்றது. இது நாட்டின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் அச்சுறுத்தலாக உள்ளது. மத மாற்றத்தை தடுப்பது தேசத்தின் பாதுகாப்புக்கு நல்லது. கர்நாடகாவில் மத மாற்ற தடை சட்டம் கொண்டு வர இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. நாடு முழுதும் இந்த சட்டம் கொண்டு வரப்பட வேண்டும். கூறினார்.