தாதாக்களுக்கு சிம்ம சொப்பனம் யோகி

உத்தரபிரதேசம் காசிப்பூரில் சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சிகளின் ஆட்சியில் அதிகார பலத்துடன் மிகப்பெரிய தாதாவாக வலம் வந்தவர் முக்தார் அன்சாரி. இவர் மீது கொலை, கொள்ளை, கடத்தல், தீ வைத்தல் போன்ற பல குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளன. இவர் முன்னாள் நாடாளுமன்ற துணைத் தலைவர் ஹமீத் அன்சாரியின் உறவினர் மட்டுமல்லாது உ.பியின் சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ளார். பஞ்சாப்பில் இருந்து இவரை உ.பிக்கு அனுப்ப உ.பி அரசு கேட்டுக்கொண்டது. ஆனால் அதனை கேப்டன் அமரீந்தர் சிங்கின் தலைமையிலான காங்கிரஸ் அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர்களின் துணையுடன் தடுத்து நிறுத்தியுள்ளது.  இந்நிலையில், லக்னோவில் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள ‘ராணி சுல்தானத் பிளாசா’ என்ற அன்சாரியின் கட்டடத்தை, யோகி ஆதித்தியநாத் தலைமையிலான அரசு இடித்து தள்ளியுள்ளது.