சமூக வலைத்தளங்கள் மட்டுமல்ல, அமேசான், நெட்பிளிக்ஸ் உள்ளிட்ட ஓ.டி.டி இணையதளங்களும் ‘ஹிந்து போபியா’ எனும் நோய் கொண்டு அலைகின்றன. அவ்வகையில், சமீபத்தில் நெட்பிளிக்ஸில் வெளியான ‘பாம்பே பேகம்ஸ்’ தொடர் ஹிந்துக்களை விமர்சிக்கும் வகையில் உள்ளது என பலர் கருத்து தெரிவித்திருந்தனர். மேலும், குழந்தைகளிடையே போதைப்பொருள் பயன்பாடு, வன்முறை போன்ற காட்சிகளும் இடம் பெற்றிருப்பதாக சமூகவலைத்தளங்களில் கருத்து பரவியது. இதனைத் தொடர்ந்து, குழந்தைகள் உரிமைப் பாதுகாப்பிற்கான தேசிய ஆணையம், இந்த சீரியலின் ஒளிபரப்பை நிறுத்துமாறு கூறியது. மேலும் அதன்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையின் அறிக்கையை 24 மணி நேரத்திற்குள் சமர்ப்பிக்கும்படி உத்தரவிட்டுள்ளது. மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளது.