தேசிய ஒற்றுமையை ஏற்படுத்துவதாகக் கூறி முஸ்லிம் பெண்களை கற்பழிப்பது, கட்டாய கருத்தடை, கருக்கலைப்பு, மின்சாரம் பாய்ச்சுதல் என உய்குர் முஸ்லிம் இன பெண்களுக்கு எதிராக சீனா தொடர்ந்து அட்டூழியங்கள் செய்துவருகிறது. அங்குள்ள தடுப்பு மையங்களில் முஸ்லிம் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை ஒருவர் கற்பனைகூட செய்து பார்க்கமுடியாது. லட்சக்கணக்காண முஸ்லிம்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மதத்தை அழிக்க கட்டாய மறு கல்வி தொடர்ச்சியாக பல வருடங்களுக்கு கற்பிக்கப்படுகிறது. பல்லாயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். சீனா, தனது மக்களிடையே உய்குர் முஸ்லிம்களை வேறுபடுத்தி அறிய சிறப்பு செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான தொழில்நுட்பத்தையும் உருவாக்கி பயன்படுத்துகிறது என அங்கிருந்து தப்பி அமெரிக்காவுக்கு வந்த ஜியாவுடுன் என்ற உய்குர் முஸ்லிம் பெண் கூறியுள்ளார்.