நாடு முழுவதும் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் சூழலில், சில மாநிலங்களில் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. இதற்கு தீர்வு தரும் விதமாக, ரயில் பெட்டிகளை கொரோனா சிகிச்சை வார்டுகளாக ரயில்வே மாற்றி வருகிறது. இது குறித்து ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இதுவரை 4000 பெட்டிகள் கொரோனா சிகிச்சை வார்டுகளாக மாற்றப்பட்டுள்ளன. தற்போது 16 ரயில்வே மண்டலங்களில் இந்த பெட்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மா நில அரசுகள் கோரிக்கை அளித்தால் அவர்களின் தேவைக்கு ஏற்ப பெட்டிகள் வழங்கப்படும். மாநில அரசுகளின் கோரிக்கைக்கு ஏற்ப நாடு முழுவதும் 3 லட்சம் படுக்கைகள் கொரோனா சிகிச்சைக்காக ஏற்பாடு செய்யப்படும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.