‘தி.மு.க.வினர், சென்னை அடையாறில் உள்ள மாநகராட்சி அலுவலகத்திற்குச் சென்று, தற்போது இருக்கும் களப்பணியாளர்களை நீக்கிவிட்டு, அவர்கள் சொல்லும் நபர்களை பணியில் அமர்த்த வேண்டும் என்று மிரட்டி உள்ளனர். அதற்கு அதிகாரிகள், கட்சிகளின் பரிந்துரையின் பேரில் களப்பணியாளர்கள் யாரும் நியமிக்கப்படுவதில்லை, பயிற்சி பெற்று, திறம்பட பணியாற்றிக் கொண்டிருக்கும் தற்போதைய களப்பணியாளர்களை மாற்றியமைத்தால் நோய்த்தடுப்புப் பணியில் தொய்வு ஏற்படும் என்று எடுத்துக்கூறியுள்ளனர் என பத்திரிகைகளில்செய்தி வந்துள்ளது. இப்படி அனைத்திலும் தி.மு.க.வினர் செயல்பட்டால் கொரோனா நோய்த்தடுப்புப் பணியில் தொய்வு ஏற்பட்டு, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். முதலமைச்சருக்கும் அவப்பெயர் ஏற்படும். எனவே, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள களப்பணியாளர்கள் நியமனத்தில் தி.மு.கவினர் ஈடுபடுவதை முதலமைச்சர் ஸ்டாலின் உடனடியாக தடுக்க வேண்டும்’ என்று அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.