தமிழக அரசின் கொரோனா பரவலின் தடை உத்தரவை தொடர்ந்து ஹிந்து கோயில்களின் திருவிழாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. நடந்த கொண்டிருக்கும் சிலதிருவிழாக்களும் துரித கதியில் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. கோயில்களில் இரவு எட்டு மணிக்கு மேல் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை போடப்பட்டுள்ளது. இந்நிலையில், வரப்போகும் ரம்ஜானையொட்டி மசூதிகளை இரவு 10 மணிவரை திறந்திருக்க தமிழக அரசை சில முஸ்லிம் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ரம்ஜான் நோன்பு கஞ்சி காய்ச்ச அரசின் இலவச அரிசி இன்னும் வரவில்லை, உடனே வழங்குங்கள் என கேட்கின்றனர். அங்கு அவர்களை சமூக இடைவெளி விட்டு நமாஸை செய்ய தமிழக அரசு வலியுறுத்துமா? இரவு எட்டு மணிக்கு மேல் மசூதிகள் திறந்திருக்க கூடாது என கூறி அதை சட்டப்படி முறையாக நிறைவேற்றுமா தமிழக அரசு? ஒருவேளை அவர்களுக்கு சலுகை கட்டப்பட்டால் அந்த சலுகை ஹிந்து கோயில்களுக்கும், கிறிஸ்தவ பேராலயங்களுக்கும் விரிவுபடுத்தப்படுமா? பொறுத்திருந்து பார்ப்போம்.