நாடு முழுவதும் கொரோனா வைரைசின் 2வது அலை பரவல் சற்று தணியத் துவங்கியுள்ளது. நாளொன்றுக்கு 3 லட்சத்தை தாண்டி பதிவான கொரோனா பாதிப்பு, தற்போது 50 ஆயிரம் என்ற அளவில் காணப்படுகிறது. இதனையடுத்து, கொரோனா 2வது அலை பரவல் வேகம் குறைந்துள்ளதால் பல மாநிலங்களில் ஊரடங்கு தளர்வுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதற்கிடையே, கொரோனா 2வது அலை இன்னும் முடிவுக்கு வரவில்லை என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. நாட்டில் உள்ள 75 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை இன்னும் 10 சதவீதத்திற்கு மேல் உள்ளது. எனவே, தொற்று பரவல் அதிகரிக்கும் வகையிலான தவறுகளை மீண்டும் செய்யக்கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது.