அரியலூர் மாணவி கிறிஸ்தவ பள்ளியின் மதமாற்ற அழுத்தத்தால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தேசிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டும் மதமாற்றத்தை தடுக்க வலியுறுத்தியும் பா.ஜ.க, ஹிந்து அமைப்புகள் பல்வேறு கட்ட போராட்டங்களை நாடு முழுவதும் நடத்தி வருகின்றன. இதில் உண்மைகளை மறைத்து மதமாற்ற விஷயமே இல்லை என காட்டுவதற்காக கிறிஸ்தவ மிஷனரிகள், தி.மு.க, அதன் கூட்டணிக் கட்சிகள் எல்லாம் முயற்சித்து வருகின்றன. ஊரையே ‘மைக்கேல்பட்டி’ என மதமாற்றம் செய்துவிட்டு எங்கள் ஊரில் மதமாற்றமே நடக்கவில்லை, யாரும் இங்குவந்து விசாரணை நடத்தக்கூடாது என ஆட்சியருக்கு மொட்டை கடிதம் அனுப்பப்படுகிறது. தேவையற்ற விஷயங்களுக்கு கொடிபிடிக்கும் சினிமா நடிகர்கள், போலி சமூகப் போராளிகள், தொலைக்காட்சி நெறியாளர்கள், நடுநிலை பத்திரிகையாளர்கள் போன்ற கூட்டம் எதுவும் இதுவரை இந்த மரணம் குறித்து வாய் திறக்கவில்லை. இதே அரியலூரை சேர்ந்த மாணவி அனிதா மரணத்திற்கு அலறி அடித்துக் கொண்டு ஓடிய தமிழக முதல்வர் ஸ்டாலின், இந்த விவகாரத்தில் கண்ணை மூடிக்கொண்டுள்ளார். இத்தனைக்கும் இறந்த மாணவியின் தந்தை நெடுங்கால தி.மு.க உறுப்பினர். இந்நிலையில், தூய இருதய மேல்நிலைப் பள்ளியில் இலக்கு வைத்து மதம் மாற்றம் நடைபெற்றதற்கான ஆதாரத்தை வெளியிட்டுள்ளார் பிரபல எழுத்தாளர் மாரிதாஸ். இப்போதாவது வாய்திறப்பார்களா சம்பந்தப்பட்டவர்கள்?