தொடரும் இஸ்ரோ சாதனைகள்

கடந்த ஐந்து ஆண்டுகளில் 25 ராக்கெட்டுகள் மூலம் 27 செயற்கைக்கோள்கள் வெர்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டு உள்ளன. இக்காலகட்டத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வாடிக்கையாளர்களிடமிருந்து 286 வணிக செயற்கைக் கோள்களும் மாணவர்கள் உருவாக்கிய 8 சிறிய செயற்கைக்கோள்களும் ஏவப்பட்டுள்ளன.

இதைத்தவிர பாரதத்தின் சந்திரயான் 2’ஐ சுற்று வட்டப்பாதையில் நிலைநிறுத்திய பாரதத்தின் ஹெவி லிஃப்ட் ராக்கெட் GSLV Mk-III, மேம்பட்ட வரைபட செயற்கைக்கோள், கார்டோசாட்-3, NavIC, தெற்காசிய நாடுகளின் செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவுதல், மேம்பட்ட உயர் செயல்திறன் கொண்ட தகவல் தொடர்பு செயற்கைக் கோள்கள், GSAT – 11, பி.எஸ்.எல்.வி மூலம் ஒரே நேரத்தில் 104 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவுதல், ஸ்க்ராம்ஜெட் எஞ்சின், மீண்டும் பயன்படுத்தக்கூடிய செலுத்து வாகனம், க்ரூ எஸ்கேப் சிஸ்டத்திற்கான சோதனை போன்றவையும் இக்காலகட்டத்தில் வெற்றிகரமாக நிரூபிக்கப்பட்டுள்ளன.

எதிர்காலத்தில், விண்வெளிப் போக்குவரத்து, செயற்கைக்கோள் தொடர்பு ஊடுருவல், புவி கண்காணிப்பு, விண்வெளி அறிவியல் மையம், கிரகங்கள் ஆய்வு, விண்வெளி அடிப்படையிலான பயன்பாடுகள் போன்ற பல்வேறு குறுகிய கால மற்றும் நீண்ட கால திட்டங்களை விண்வெளித் துறை தனது பட்டியலில் வைத்துள்ளது’ என மத்திய விண்வெளித்துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.