கோவையில் உள்ள செட்டிப்பாளையம் பகுதியில் வயதான பெண் ஒருவர் கடந்த 7 ஆண்டுகளாக ஆவின் பாலகம் நடத்தி வருகிறார். தி.மு.க தற்போது ஆட்சிக்கு வந்துள்ள சூழலில் அதனை பயன்படுத்தி தி.மு.க நிர்வாகி ராமசாமி என்பவர், அவரிடம் கடை நடத்த வேண்டும் என்றால் தினமும் எனக்கு 300 ரூபாய் மாமூல் கொடுக்க வேண்டும். இல்லையென்றால் கடை நடத்த முடியாது என்று மிரட்டியுள்ளார். மேலும், எழுதப்படிக்கக்கூடத் தெரியாத அந்த பெண்ணிடம் வெற்று காகிதத்தில் கையெழுத்து பெற்றுள்ளார். அவரது கடைக்கு வழங்கப்பட்டு வந்த மின் விநியோத்தையும் துண்டித்துள்ளார். இதனால் வாங்கிய பால் பொருட்களை இருப்பு வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்று பிரபல செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு அந்த பெண்மணி தெரிவித்துள்ளார். பெயரைக் கெடுக்கும் இது போன்ற கட்சி நிர்வாகிகள் மீது முதல்வர் நடவடிக்கை எடுப்பாரா?