நீதி கேட்டு தொடர் போராட்டம்

மதமாற்றக் கொடுமையால் தற்கொலை செய்துகொண்ட அரியலூர் மாணவி லாவண்யாவின் மரணத்திற்கு நீதி கேட்டு பாரதமெங்கும் தொடர் போராட்டங்களை அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏ.பி.வி.பி) அமைப்பை சேர்ந்த மாணவர்கள் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். அவ்வகையில், கடந்த இரண்டு நாட்களில் குஜராத்தின் சூரத், மத்திய பிரதேசத்தின் சாத்னா, இந்தூர், பிகாரின் முசாபர்பூர், ஆந்திராவின் விஜயவாடா, திருப்பதி, பெடரு, நாயுடுபேட்டை, அமலாபுரம் உள்ளிட்ட பல பகுதிகளில் போராட்டங்கள், பேரணிகள் நடைபெற்றன.