முஸ்லிம்களின் மனம் புண்படுத்தும் வகையில் ஒரு சமூகப் பதிவிட்டார் எனக்கூறி குஜராத்தை சேர்ந்த கிஷன் பர்வத் என்ற ஹிந்து இளைஞரை முஸ்லிம் பயங்கரவாதிகள் கொடூரமாக சுட்டுக் கொன்றனர். அந்த பதிவிற்கு அவர் மன்னிப்பும் கேட்டிருந்தார். எனினும் சகிப்புத் தன்மையற்ற முஸ்லிம் பிரிவினைவாதிகள் அவரை கொன்றனர். இந்த படுகொலை விவகாரம் குறித்து பா.ஜ.க நாடாளுமன்ற உறுப்பினர் கைலாஷ் சோனி, மாநிலங்கள் அவையில் கேள்வி எழுப்பினார். ‘இந்த வழக்கில் பயங்கரவாத தடுப்புப்பிரிவு காவல்துறை (ஏ.டி.எஸ்) நடத்திய விசாரணையில், 2019ல் லக்னோவில் ஹிந்து சமாஜ் கட்சித் தலைவரான கமலேஷ் திவாரியை முஸ்லிம் பயங்கரவாதிகள் கொன்றது போலவே கிஷன் பர்வத்தையும் கொலை செய்துள்ளனர். கிஷன் பர்வத் கொலைக்கு திட்டமிட்ட ஆறு முஸ்லிம் மதகுருமார்கள் உட்பட இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் கைது செய்யப்பட்ட மௌலானா ஷபீருக்கு, சுதர்சன் டி.வி தலைவர் சுரேஷ் சவாங்கே, யதி நரசிங்கானந்த், ஜிதேந்திர தியாகி (வாசிம் ரிஸ்வி) உட்பட 11 பேரைக் கொல்ல ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. நடைபெறும் 5 மாநில சட்டமன்றத் தேர்தலின்போது, நாட்டில் வகுப்புவாத கலவரங்களைத் தூண்டிவிட்டு குழப்பத்தை உண்டாக்கும் நோக்கில் இந்த கொலை ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன என விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால் அந்த 11 பேருக்கும் உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்’ என கோரினார்.