ஐந்து மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்ததையடுத்து, மாநிலங்களவையில் காங்கிரஸ் கட்சி தன் எதிர்கட்சித் தலைவர் பதவியை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மக்களவையில் ஏற்கனவே எதிர்க்கட்சித் தலைவர் பதவியை இழந்த காங்கிரஸ், மாநிலங்களவையிலும் அதன் பிரதிநிதித்துவம் குறைவதால் பெரும் பின்னடைவை சந்திக்கிறது.
தற்போதைய நிலவரப்படி, காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்யும் ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் கூட்டணியில் உள்ள மகாராஷ்டிராவில் மட்டுமே பிரதிநிதித்துவ அடிப்படையில் மக்களவைத் தொகுதிகளில் செல்வாக்கு பெற்றுள்ளது. பஞ்சாபில் காங்கிரஸ் அடைந்த படுதோல்வியால் அம்மாநிலத்தின் ஐந்து மக்களவை இடங்களும் ஆம் ஆத்மிக்கு சென்றுவிடும். இதனால், மக்களவையில் ஆம் ஆத்மி உறுப்பினர்களின் எண்ணிக்கை 3ல் இருந்து 8 ஆக அதிகரிக்கும்.
வரும் மார்ச் 31ல் மாநிலங்களவையின் 13 இடங்களுக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. அவற்றில் பஞ்சாப் 5, அசாம் 2, ஹிமாச்சலப் பிரதேசம் 1, கேரளா 3, நாகாலாந்து மற்றும் திரிபுராவில் தலா ஒரு இடங்கள் அடங்கும். காங்கிரஸ் கூட்டணியில் உள்ள அந்தந்த மாநிலக் கட்சிகளின் அதிகரித்து வரும் செல்வாக்கு, காங்கிரஸை மேலும் பலவீனப்படுத்தும். தற்போதைய நிலவரப்படி, கேரளா அல்லது அசாமில் இருந்து ஒரு இடத்தையாவது பெற முடியும் என்று அக்கட்சி நம்புகிறது.
அடுத்ததாக இவ்வாண்டு இறுதிக்குள், உத்தரப் பிரதேசத்தில் 13, பீகாரில் 5, ராஜஸ்தானில் 4, மத்தியப் பிரதேசத்தில் 3, பஞ்சாபில் 2, உத்தராகண்டில் ஒரு தொகுதி உட்பட மக்களவை தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. இப்படி இவ்வாண்டு இறுதிக்குள் மக்களவையில் எழுபத்தைந்து இடங்களுக்கு தேர்தல்கள் நடைபெறவுள்ளதால் காங்கிரசின் பலம் 34ல் இருந்து 27 ஆகக் குறையும்.
இது காங்கிரசுக்கு விடப்படும் எச்சரிக்கை மணி. ஏனெனில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியைத் தக்கவைக்க, அவையின் மொத்த இடங்களில் குறைந்தபட்சம் 10 சதவீதத்தை பெற்றிருக்க வேண்டும். மக்களவையில் மொத்தம் 250 இடங்கள் உள்ளன. இதில் 238 இடங்கள் மாநிலங்களை பிரதிநிதித்துவப்படுத்தும். 12 இடங்கள் குடியரசுத் தலைவரால் பரிந்துரைக்கப்படும். எனவே, காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவர் பதவியைத் தக்கவைத்துக் கொள்ள குறைந்தபட்சம் 25 இடங்களை பெறுவது அவசியம். தற்போதைய நிலையில், பல்வேறு மாநிலங்களில் அக்கட்சியின் நிலைமையைப் பார்க்கும்போது, காங்கிரஸ் தன் எதிர்கட்சித் தலைவர் பதவியை தக்கவைத்துக்கொள்ளுமா என்பது சந்தேகமே.
அதேசமயம் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அமோக வெற்றி பெற்றதால் பா.ஜ.கவின் மக்களவை பிரதிநிதித்துவம் 97ல் இருந்து 104 ஆக அதிகரிக்கும். இவ்வாண்டின் இறுதியில், அதன் கூட்டணியின் பலம் 122 இடங்களாக அதிகரிக்கும்.