தன் ஆட்சி காலத்தில் செய்த ஹிமாலய ஊழல்களால் தற்போது நாடாளுமன்றத்தில் மைனாரிடி எதிர்கட்சியாக காங்கிரஸ் உள்ளது. இதனால் ஆளும் பா.ஜ.க அரசு என்ன செய்தாலும் அதனை கண்ணை மூடிக்கொண்டு எதிர்க்க வேண்டும் எனும் மனோவியாதியின் உச்சத்தில் உள்ளது காங்கிரஸ். சமீபத்தில் அக்கட்சியின் அதிகாரபூர்வமான டிவிட்டர் பக்கத்தில் வெளியான ஒரு கண்டன செய்தி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கொரோனா பொதுமுடக்க காலத்தில் ஏற்பட்ட தற்காலிக வேலைவாய்ப்பின்மை ஏப்ரலில் 23.53 சதவீதத்தில் இருந்து மே மாதத்தில் 21.73 சதவீதமாகக் குறைந்துள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இந்த பட்டியலை சுட்டிக்காட்டியுள்ள காங்கிரஸ், ‘மோடி இதற்கு பதில் சொல்லுங்கள்’ என தன் கண்டனத்தை பதிவிட்டுள்ளது!!! இந்த வேலைவாய்ப்பின்மை ஜனவரியில் 6.5 சதவீதமாக மேலும் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.