ஹிந்து மத விழாவினை தடுக்கும் நோக்கில், ஹிந்துக்களின் மிக முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பொங்கல் பண்டிகை நாட்களில் மதவழிபாட்டுத் தலங்களை திறக்க தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதற்கு இந்து முன்னணி அமைப்பு கடும் கண்டனத்தை தெரிவித்து உள்ளது. ஆங்கில புத்தாண்டு அன்று நள்ளிரவில் ஹிந்து கோயில் நடைகளை ஆகம விதிகளை மீறி திறக்க வலியுறுத்திய தமிழக அரசு, பொங்கல் காலத்தில் கோயில்களை திறக்க தடை விதிப்பது தி.மு.கவின் இரட்டை நாக்கை காட்டுகிறது என தெரிவித்து உள்ளது. இதேபோல பல்வேறு ஹிந்து அமைப்புகளும் தமிழக அரசின் இந்த சார்பு நிலைப்பாட்டிற்கு கண்டனங்களை தெரிவித்துள்ளன.