தமிழக அரசு, விநாயகர் சதுர்த்திக்கு தடை விதிக்கக்கூடாது – கோவை காமாட்சிபுரி ஆதீனம் சாக்த ஸ்ரீ சிவலிங்கேஸ்வர ஸ்வாமிகள்.
‘போலீஸ் பதுகாப்புடன் டாஸ்மாக் நடத்தலாம் ஆனால் விநாயகர் சதுர்த்தி கூடாதா? எதற்காக விநாயகர் சதுர்த்தி பேரணிக்கு மட்டும் தடை? கட்டுபாடுகள் இருக்கலாம் ஆனால் நடத்தவே கூடாது என்று சொல்வதை பா.ஜ.க ஏற்காது. – தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை.
விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு தடை, தி.மு.க அரசு ஹிந்துக்களுக்கு அநீதி இழைக்கிறது. அரசு தடுத்தாலும் ஆண்டவன் வழி காட்டுவான். வரும் செப்டம்பர் 2, வியாழக்கிழமை அன்று தமிழகமெங்கும் கோயில்களில் கூடுவோம். இறைவனிடம் முறையிடுவோம். – காடேஸ்வரா சுப்பிரமணியம் – இந்து முன்னணி மாநிலத் தலைவர்
சமூக வேறுபாடுகளைக் களைந்து அனைத்து சமுதாயத்தினரும் இணக்கமாக கொண்டாடும் விநாயகர் சதுர்த்தியை அரசு தடை செய்வது பாரபட்சமானது. உடனடியாக அரசு தனது நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்து விநாயகர் சதுர்த்தி விழாவினை தக்க வழிகாட்டு நெறிமுறைகளுடன் கொண்டாட வழிவகை செய்ய வேண்டும். என்.டி.ஆர் – நிறுவனர் அருந்ததியர் விடுதலை முன்னணி.