பிரதமர் மோடி, சமீபத்தில் நடந்த ஒரு பிரச்சாரக் கூட்டத்தில் பல சீனியர்களை ஒதுக்கி வைத்துவிட்டு உதயநிதி ஸ்டாலின் உயர் பதவிக்கு வந்துள்ளதை சுட்டிக்காட்டினார். இந்த உண்மையான குற்றச்சாட்டால் எரிச்சலடைந்த உதயநிதி ஸ்டாலின், மறைந்த பா.ஜ.க தலைவர்களான சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜேட்லியின் மரணங்களுக்கு பிரதமர் மோடி ஒருவகையில் காரணம் என்ற தொனியில் பேசியுள்ளார். இதற்கு, தேசிய அளவில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
இது குறித்து அருண் ஜெட்லியின் மகள், சோனாலி ஜெட்லி, ‘உங்களுக்கு தேர்தல் நேர அழுத்தங்கள் இருப்பது எனக்கு தெரியும். ஆனால் என்னுடைய தந்தையின் மறைவு குறித்து நீங்கள் பொய் கூறி அவமரியாதை செய்யும்போது நான் அமைதியாக இருக்க மாட்டேன். என் தந்தை அருண் ஜெட்லியும், நரேந்திர மோடியும் அரசியலுக்கு அப்பாற்பட்ட ஒரு சிறந்த பிணைப்பைக் கொண்டுள்ளனர். அத்தகைய நட்பை உணரும் அளவிற்கு நீங்கள் அதிர்ஷ்டம் பெற வேண்டும் என நான் பிரார்த்திக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார். சுஷ்மா சுவராஜ்சின் மகளான பன்சூரி ஸ்வராஜ், ‘என்னுடைய அம்மாவின் நினைவை உங்களுடைய தேர்தல் பரப்புரைக்காக பயன்படுத்த வேண்டாம். உங்களுடைய கூற்றுகள் தவறானவை. பிரதமர் நரேந்திர மோடி என்னுடைய அம்மாவின் மீது பெரும் மரியாதையையும் கௌரவத்தையும் கொண்டிருந்தார். எங்களுடைய இக்கட்டான நேரங்களில், பிரதமரும் பா.ஜ.கவும் எங்களுக்கு துணையாக நின்றனர். உங்களுடைய கூற்றுக்கள் எங்களை காயப்படுத்தி விட்டன’ என்று டிவிட் செய்துள்ளார்.