சீனாவின் பெரும் பணக்காரரான, ஜாக் மாவுக்கு சொந்தமான அலிபாபா நிறுவனத்தை அனைத்து ஊடக முதலீடுகளிலிருந்தும் உடனடியாக வெளியேறுமாறு கம்யூனிச சீன அரசு உத்தரவிட்டுள்ளது. வெய்போ, சவுத் சீனா மார்னிங் போஸ்ட் உள்ளிட்ட பல்வேறு ஊடகத்துறைகளில் அலிபாபா ஹோல்டிங் நிறுவனம் பெரிய அளவிலான முதலீடுகளை மேற்கொண்டிருக்கிறது. அவரின் இந்த ஊடக செல்வாக்கு பிற்காலத்தில் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு சவாலாக இருக்கும் என கருதும் சீன அரசு, அதனை அடக்கும் முயற்சியே இது என ‘வால்ஸ்ட்ரீட் ஜர்னல்’ பத்திரிகை தெரிவித்துள்ளது.
சீனாவின் அடக்குமுறையை எதிர்த்து ஹாங்காங்கில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்கள் குறித்து தயாரிக்கப்பட்ட’டோன்ட் ஸ்பிளிட்’ என்ற ஆவணப்படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதனை தங்கள் நாட்டு மக்கள் பார்க்கக்கூடாது எனும் நோக்கில், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பிரச்சாரத் துறை உள் நாட்டில் உள்ள அனைத்து ஊடகங்களுக்கும், ‘அடுத்த மாதம் நடைபெற உள்ள ஆஸ்கார் விழாவை ஒளிபரப்ப வேண்டாம்’ என்ற உத்தரவை பிறப்பித்துள்ளது.