கேரளாவில் பரபரப்பான கருவண்ணூர் கூட்டுறவு வங்கி மோசடி வழக்கில், ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ஏ சி மொய்தீனின் உறவினர் ஈடுபட்டுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. கரீமின் மகன் பிஜு, வங்கியின் மேலாளராக 15 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறார். மோசடியாக்க் கொடுக்கப்பட்ட கடன்கள் அவருக்கு சொந்தமான தெக்கடி ரிசார்ட்ஸ் என்ற ஒரு நிறுவனத்தின் பெயரில் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் அந்த வங்கியின் உறுப்பினர்களாக உள்ள வேறு சில சி.பி.எம் தலைவர்களும் இந்த வங்கியை பயன்படுத்தி பல கோடிகளுக்கு பினாமி பரிவர்த்தனைகள் செய்ததாகக் குற்றச்சாட்டும் உள்ளது. கட்சியின் உயர்மட்ட தலைவர்கள் அவர்களைப் பாதுகாக்க முயற்சிக்கின்றனர். சுமார் 300 கோடி அளவிற்கு ஊழல் நடைபெற்றதாக கணக்கிடப்படும் இந்த ஊழல் குறித்து அமலாக்கத்துறை அறிக்கை கேட்டுள்ளது.