அரியலுார் மாவட்டம், ஆண்டிமடம் தாலுகாவில் உள்ள சாலைக்கரையைச் சேர்ந்த, சுப்ரமணியன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தங்கள் கிராமத்தில் 250 குடும்பங்கள் வசிக்கின்றனர், அனைவரும் ஹிந்துக்கள், சமீபத்தில் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் கிராமத்தில் குடியேறி, கிராமத்தில் உள்ள சர்வேஸ்வரன் கோயில் மற்றும் அய்யனார் கோயிலுக்கு சொந்தமான நிலங்களை தோப்பு மற்றும் புறம்போக்கு என மாற்றி ஆக்கிரமித்துள்ளனர். எங்கள் வழிபாடுகளில் குறுக்கிடுகின்றனர். இவர்களால் கிராமத்தைச் சேர்ந்த சிலர், கிறிஸ்தவ மதத்துக்கு மாறினர். கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்து, சின்னப்பர் தேவாலயம் என்ற பெயரில் சர்ச் கட்டினர். இதற்கு எந்த முறையான அனுமதியும் பெறப்படவில்லை. அதை அகற்றக் கோரி அரசிடம் மனுக்கள் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, அந்த மனு மீது நடவடிக்கை எடுக்கவும், கோயில் நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும் உத்தரவிட வேண்டும் என தெரிவித்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இதற்கு பதில் அளிக்க, அறநிலையத் துறை ஆணையர், அரியலூர் ஆட்சியருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.