மதச்சார்பற்ற நாட்டில் கிறிஸ்தவ மதச்சார்பு அரசியல்!

மதச்சார்பற்ற நமது இந்திய நாட்டில், அனைவருக்கும் பொதுவான சட்டம் இருக்க வேண்டும், என்பதே மக்களின் விருப்பம் ஆகும். ஆனால், ஒவ்வொரு மதத்திற்கும் ஏற்ப சட்டங்கள் மாறுபடுவது, விந்தையிலும் விந்தை. அதிலும், இந்து மதத்தை சேர்ந்த ஒருவர், ஏதாவது பேசி விட்டால், உடனே அவர் மீது அதிரடி நடவடிக்கை பாயும். மற்ற மதத்தைச் சேர்ந்தவர்கள் ஏதேனும் பேசினால், அவர்கள் மீது வழக்கு பதிவாகலாம், சில நேரங்களில் வழக்கு பதிவாகாமலும் இருக்கலாம்? ஒருவேளை வழக்கு பதிவு செய்து இருந்தாலும், காலப் போக்கில், அதன் வீரியத்தை குறைத்து விடுவார்கள்!? என்பதே மக்கள் அனைவரின் கருத்தாக உள்ளது.

எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் தவறு செய்தார்கள், எனப் பார்ப்பதை விட, யார் என்ன தவறு செய்தாலும், அதற்கு உண்டான தண்டனை வழங்கப்பட வேண்டும். சில நேரங்களில், சிலர் கடுமையானத் தவறை செய்து இருந்தாலும், அவர்களின் மதத்தைப் பார்த்த பிறகே அரசியல் கட்சியினர்கள், தங்களுடைய கருத்தை தெரிவிக்கின்றனர்.

அவர்கள் ஹிந்து என்றால், கண்டன வார்த்தைகள் கடுமையாகவும், மற்ற மதத்தினர்கள் என்றால், கண்டனம் எழுப்பாமல், அமைதியாகவும் இருப்பது, அனுதினமும் நாம் காணும் செயல்.

கிறிஸ்தவ மத போதகர் மோகன் சி லாசரஸின் சர்ச்சை கருத்து :

2020 ஆம் ஆண்டு, கிறிஸ்தவ சபைக் கூட்டத்தில் பேசிய கிறிஸ்தவ மத போதகர் மோகன் சி லாசரஸ் கூறிய கருத்து “மதம் மாற்றத்தை” ஊக்குவிப்பதாக உள்ளது என, சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்தனர்.

அவர் கூறியது, “இந்த பெந்தக்கோஸ்து மாமன்றத்தில் 38,000 திருச்சபைகள் உள்ளதாகவும், அதில் விசுவாசிகளாக 60 லட்சம் பேர் இருப்பதாகவும், அவர்கள் அனைவரும், மற்ற மதத்தைச் சேர்ந்த ஒருவரையேனும் கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றினால், அடுத்த வருடத்தில் ஒரு கோடியே 20 லட்சம் பேர் கிறிஸ்தவ மதத்திற்கு மாறுவார்கள் எனவும், இப்படியே மூன்று வருடத்திற்கு தொடர்ந்தால், தமிழகம் முழுவதும் கிறிஸ்துவ மயமாகி விடும்” எனவும் கூறி இருந்தார்.

பாராளுமன்ற மாநிலங்களவை (ராஜ்ய சபா) உறுப்பினர் வைகோ, கிறிஸ்தவ மதத்திற்கு மாறி விட்டார் எனவும், வைகோவின் பெண் மற்றும் மருமகன் இருவரும் கிறிஸ்தவர்கள் எனவும், அவர்கள் அமெரிக்காவில் வாரம் தோறும் ஞாயிற்றுக் கிழமைகளில் கிறிஸ்துவ சேவை செய்பவர்கள் எனவும், வைகோவின் மனைவியும் கிறிஸ்துவர் எனவும் கூறினார். மேலும், தினமும் இரண்டு முறை, பைபிளை படிப்பதாக வைகோ கூறியதாகவும், 2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அவர் கருத்து தெரிவித்து இருந்தார்.

2016 ஆம் ஆண்டு இந்துக் கோவில்களில் உள்ள கடவுளை, “சாத்தான்கள் வாழும் இருப்பிடம்” எனவும் கருத்து தெரிவித்து இருந்தார்.

அரசு பதவியில் இருந்து கொண்டே மதப் பிரச்சாரம் :     

உமாசங்கர் என்ற ஐ.ஏ.எஸ். அரசு அதிகாரி பதவியில் இருந்து கொண்டே, மதப் பிரச்சாரம் போன்ற செயல்களில் ஈடுபட்டார். உத்தரகாண்ட் வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்கள், கடவுளின் கோபத்தால் வருகிறது என கூறினார். அப்போதே, அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

கிறிஸ்துவ மதச் சார்பு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டும், தனது கருத்துக்களை, உமாசங்கர் ஐ.ஏ.எஸ். அவ்வப்போது தெரிவித்து வந்தார்.

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது நல மருத்துவமனையில், உமாசங்கர் ஐ.ஏ.எஸ். கிறிஸ்தவ மதப் பிரச்சாரம் செய்யும் போது, கையும் களவுமாக பிடிபட்ட செய்தி, பிரபல பத்திரிகைகளில் வெளி வந்தது.

அகஸ்டின் ஜெபக்குமாரின் சர்ச்சை கருத்து:

2013 ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் 26 ஆம் தேதி, அகஸ்டின் ஜெபக்குமார் என்ற கிறிஸ்தவ மத போதகர், இந்து மத கடவுள்களை, மிகவும் கீழ்த்தரமாக,  விமர்சித்து பேசினார்.

கிறிஸ்தவ நல்லெண்ண விழாவில் சர்ச்சைக் கருத்து:

2020 ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 20 ஆம் தேதி, மைலாப்பூரில் உள்ள சாந்தோம் மெட்ரிக் உயர் நிலைப் பள்ளியில்  S இனிகோ இருதயராஜ் தலைமையில் “கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கம்” சார்பாக கிறிஸ்துமஸ் நிகழ்ச்சிகள் அரங்கேறின.

அதில், அன்றைய எதிர்க்கட்சித் தலைவரும், தற்போதைய தமிழக முதல்வருமான மு க ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அவர் முன்னிலையிலேயே, கலையரசி நடராஜன் கூறிய கருத்து, இந்துக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தியது.

“ஹிந்து என்ற ஒரு மதமே இல்லை” எனவும், அது “உருவாகி 200 வருடங்கள் மட்டுமே ஆகிறது” எனவும், “ஹிந்து என்ற வார்த்தையைக் கேட்டாலே, உடம்பெல்லாம் எரிகிறது” எனவும் “ஹிந்து என அழைக்க வேண்டாம்” எனவும், “ஹிந்துக்கள் என்ற வார்த்தையைப் ‌ புறக்கணியுங்கள்” எனவும், கூறினார்.

அந்தக் கூட்டத்தில் பங்கேற்ற அனைவரும், அடுத்த முதல்வராக ஸ்டாலினே தேர்ந்தெடுக்கப் பட வேண்டும் என, தங்களது விருப்பத்தை தெரிவித்தனர்.

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி சர்ச்சை:

திருச்சியில் உள்ள பிஷப் ஹீபர் கல்லூரியில் பணிபுரியும் பேராசிரியரும், தமிழ் துறைத் தலைவருமான பால் சந்திர மோகன், அந்தக் கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, பாதிக்கப் பட்ட மாணவிகள் புகார் தெரிவித்து இருந்தனர்.  சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளி புகாருக்கு ஒரு சேர கண்டனம் தெரிவித்த எவரேனும் இந்தக் கல்லூரியை பற்றி வாய் திறந்து பேசினார்களா?

யார் தவறு செய்து இருந்தாலும், நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும்.

அருளானந்தர் கல்லூரியின் அடாவடி செயல்:

மதுரை மாவட்டத்தில் உள்ள ‌ கருமாத்தூர் ஊராட்சியில் அருளானந்தர் கல்லூரி உள்ளது. அந்தக் கல்லூரியின் வாட்ஸ்அப் குழுவில், ஸ்டான் ஸ்வாமியை பாராட்டியும்,  பாஜகவை கடுமையாக விமர்சித்தும் செய்திகள் பரவியது. ஸ்டான் ஸ்வாமி இறந்ததற்கு காரணமே பாஜக என்ற வகையில், அவர்கள் குழுவில், செய்தி பரவியது.

ஜார்ஜ் பொன்னையா சர்ச்சை கருத்து:

2021 ஆம் ஆண்டு, ஜூலை மாதம் 18 ஆம் தேதி கன்னியாகுமரியில் உள்ள அருமனையில், பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா கூறிய கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியது.

2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், திமுக வெற்றி பெற்றது, “கிறிஸ்துவர்கள் போட்ட பிச்சை” என்றும், ஆயர்கள் கண் அசைத்தால் தான், திமுகவிற்கு ஓட்டு விழும் என்றும், பாரத மாதாவை அவமானப் படுத்தும் எண்ணத்தில் தான், பாரத மாதாவின் மீது தங்களுடைய கால்கள் படக் விடக் கூடாது என்பதற்காகவே  ஷு போட்டுக் கொண்டு நடப்பதாகவும், கன்னியாகுமரி மாவட்டத்தில் 42 சதவீதமாக இருந்த கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை, தற்போது 62 சதவீதம் ஆக மாறி விட்டது எனவும், விரைவில் அது 70 சதவீதமாக ஆக மாறி விடும் எனவும், தமிழக சட்டமன்ற சபாநாயகராக இருக்கும் அப்பாவு, கிறிஸ்துவராக மதம் மாறியதால் தான் தற்போது, அந்தப் பொறுப்பில் வகிக்கிறார் எனவும், நாடார் சமுதாயத்தைப் பற்றியும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை பற்றியும் இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பற்றியும் அருவருக்கத்தக்க வகையில் பேசினார்.

மேலே குறிப்பிடப் பட்டது சில சம்பவங்கள் மட்டுமே…

இது போல, நிறைய சம்பவங்கள் தமிழகத்தில் நடந்து உள்ளது, தற்போதும் நடந்து கொண்டு தான் இருக்கின்றது. வெறுமனே பெயரளவிற்கு வழக்கு பதிவு செய்யப் பட்டு, பின்னர், அது போன்ற வழக்குகள் நீர்த்துப் போகச் செய்யப் படுகின்றன! என்ற ஐயப்பாடும் மக்கள் மனதில் உள்ளது.

இது போன்ற வன்முறையை தூண்டும் சம்பவங்களுக்காக, யாரேனும் கண்டனம் தெரிவித்து உள்ளனரா?

இதுவரை, எத்தனை அரசியல் கட்சிகள், இது போன்ற சம்பவங்களுக்காக, கண்டனம் தெரிவித்து உள்ளது?

யாரேனும் இதுவரை தண்டனைக்கு உள்ளானார்களா?

அவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்து உள்ளதா?

மக்களால் தேர்வு செய்யக் கூடிய ஒரு பிரதிநிதியை, சட்டமன்ற உறுப்பினர்களை, தாங்கள் போட்ட பிச்சை என அழைத்த பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா மீது இதுவரை, குண்டாஸ் போடப் பட்டது உள்ளதா?

என மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்…

மேலும், என்.ஐ.ஏ.வால் (N.I.A.) குற்றம் சாட்டப்பட்டு, தண்டனைக்கு உள்ளான ஸ்டேன் ஸ்வாமி நினைவு நிகழ்ச்சியில், தமிழக முதல்வர் கலந்து கொண்டது, தமிழக மக்களுக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்தியது. ஓரு குற்றவாளிக்கு தமிழக முதல்வர் அஞ்சலி செலுத்த வேண்டிய அவசியம் என்ன? என தமிழக உணர்வாளர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஹிந்து மதத்தை சேர்ந்த எவரேனும் சர்ச்சையானக் கருத்துக்களை கூறினால், தலைப்புச் செய்தியாகவும், தொலைக்காட்சி விவாதங்களாகவும்  வரும் தமிழகத்தில், இது போன்ற தகாத சம்பவங்களுக்காக, எத்தனை முறை பத்திரிக்கைகளில் தலைப்பு செய்தியாகவும், தொலைக் காட்சிகளில் விவாதங்களாகவும்  வந்து உள்ளது என்ற கேள்விக்கு, எந்த பதிலும் யாரும் கூறவில்லை…

இது போன்ற தகாத சம்பவங்களால் ஹிந்துக்களுக்கு ஒரு நியாயம்? மற்ற மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஒரு நியாயமா? என மக்கள் எழுப்பிய கேள்விகளுக்கு யாரும் பதில் அளிக்கவில்லை…

ஹிந்துக்களை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றுவதையே, தங்களின் முழு நேரத் தொழிலாக செய்யும், கிறிஸ்தவ மத போதகர்கள், நமது நாட்டை கிறிஸ்தவ மயமாக்க, பகிரங்கமாக அறைகூவல் விடுத்து, மதமாற்றத்தை அறிவித்து, அதனை ஊக்குவிக்கும் செயல்களில் ஈடுபடுகிறார்கள். இதனைத் தடுக்க மதமாற்ற தடை சட்டத்தை ஆதரிப்பார்களா தமிழக அரசியல்வாதிகள்.? இதற்கு என்ன பதில் சொல்லப் போகின்றார்கள்.?!

கியூபாவிற்காக சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தை எதிர்த்து போராடும் தமிழக கம்யூனிஸ்ட் கட்சியினர், தமிழகத்திற்காக, தமிழக மக்களின் நலனுக்காக, தமிழர்களிடையே உள்ள ஒற்றுமையை சீர்குலைக்கும் சக்தியை எதிர்த்து போராட முன் வருவார்களா..?

        அனைத்து அரசியல் கட்சிகளும் அதற்கு துணை நிற்குமா..?

                                                                  நடக்கும் என்பார் நடக்காது..!

  • . ஓம்பிரகாஷ், Centre for South Indian Studies, Chennai

உதவிய தளங்கள்:

https://twitter.com/HLKodo/status/1227235548688830464

https://swarajyamag.com/politics/vaiko-conversion-and-beyond

https://www.facebook.com/watch/?v=497997007249709

https://www.thehindu.com/news/cities/Coimbatore/one-more-case-against-evangelist-mohan-lazarus/article25127060.ece

https://swarajyamag.com/insta/evangelist-ias-officer-umashankar-caught-proselytising-inside-a-government-hospital-in-chennai

https://twitter.com/ProfessorBJP/status/1420379806558916609

https://www.youtube.com/watch?v=Ne9tz-E0Siw

https://www.facebook.com/christuvanallenaiyakkam/videos/1308484809485519