ஹிந்து கல்லூரியில் கிறிஸ்தவ முதல்வர்

திருச்செந்தூர் சுப்பிரமணிசாமி கோயில் நிர்வாகத்தால் நிர்வகிக்கப்படும் கல்லூரியில் +2 முடித்தவர்களுக்கு 3 மாத சைவவியல், வைணவவியல் சான்றிதழ் படிப்புகள் தொடங்கப்படும். 24.11.2021 முதல் 14.12.2021 வரை விண்ணப்பிக்கலாம், வயது வரம்பு, விண்ணப்ப கட்டணம் இல்லை என விளம்பரம் செய்யப்பட்டு உள்ளது. ஆனால், ஹிந்து சமய அறநிலையத் துறையால் நிர்வகிக்கப்படும் அந்த கல்லூரியின் முதல்வர் ஜெயாலி லசீதா என்ற கிறிஸ்தவர்.

அறநிலையத் துறையால் ஹிந்து மத கல்லூரி முதல்வராக நியமிக்க ஒரேயொரு ஹிந்து முதல்வர்கூட கிடைக்கவில்லையா? ஒரு கிறிஸ்தவருக்கு முதல்வராக உயர் பதவி அவர் கீழ் பணிபுரியும் ஹிந்து ஆசரியர்கள், ஊழியர்கள், மாணவ மாணவிகள் என்ற கட்டமைப்பு, மதமாற்றத்திற்கு வழிவகுக்காதா? கல்லூரி முதல்வரின் அறையில் திருச்செந்தூர் முருகன் படம் இருக்குமா அல்லது சிலுவை இடம்பெறுமா? அந்த விளம்பரத்தில் முதல்வர் ஸ்டாலின், கருணாநிதி மற்றும் சேகர் பாபு படங்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால், திருச்செந்தூர் கோயிலின் படமும் முருகன் படமும் இடம்பெறவில்லையே?