பாரத மக்களின் தரவுகளை சீன செயலிகள் திருடிய காரணத்தினால் அவற்றில் 200க்கும் அதிகமானவற்றை மத்திய அரசு தடை செய்தது. இந்த பிரச்சனைக்கு பின்பும் பாரதத்தில் சில சீன செயலிகள் இயங்கி வருவது மட்டும் அல்லாமல் கடந்த ஒரு வருடத்தில் மிகப்பெரிய அளவிலான வளர்ச்சியையும் அடைந்துள்ளது.
அலிபாபா, சியோமி உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்களின் செயலிகள் கூட தங்களது சீன அடையாளத்தை மறைத்து சீன பெயர் அல்லாத புதிய நிறுவனத்தின் பெயரில் வலம் வருகிறது. பாரதத்தில் தற்போதுள்ள டாப் 60 செயலிகள் பட்டியலில் 8 சீன செயலிகள் உள்ளது. இவற்றிக்கு மட்டும் சுமார் 211 மில்லியன் வாடிக்கையாளர்கள் உள்ளனர். சீன செயலிகள் பாதுகாப்பற்றது என தெரிந்தும் சிலர் சீன செயலிகளை பதிவிறக்கம் செய்துள்ளனர்.
ப்ளேஇட் (Alibaba/Guanzhou Nemo) என்னும் சீன செயலி பாரதத்தில் வேகமாக வளரும் செயலிகளில் ஒன்றாக உள்ளது. வெறும் 28 மில்லியன் வாடிக்கையாளர்களை வைத்திருந்த ப்ளேஇட், தற்போது 67 மில்லியன் வாடிக்கையாளர்களை பெற்று உள்ளது. இதைத் தொடர்ந்து ஷேர்மி (சியோமி), ஜிலி (சியோமி), டிகி (YY இன்க்), ரெசோ (பையிட் டான்ஸ்), நாய்சி (YY இன்க்), mAst (Xiaoying Technologies), மிவி (பையிட் டான்ஸ்) ஆகியவை அதிக வாடிக்கையாளர்கள் கொண்ட பட்டியலில் அடுத்தடுத்த இடத்தை பிடித்துள்ளன. இந்த செயலிகளும் வாடிக்கையாளரின் பல வித முக்கியத் தரவுகளை சேகரித்துள்ளன.
கூகுள் ப்ளே ஸ்டோர் தளத்தில் இந்த செயலிகளின் உரிமையாளர்கள், நாடு ஆகிய தரவுகள் மறைக்கப்பட்டாலும், இந்நிறுவனத்தின் இணையதளம், லிங்கிடு இன் ப்ரொபைல் ஆகியவற்றை கொண்டு ஆராயும்போது இவை அனைத்தும் சீன நிறுவனங்களின் செயலிகள்தான் என்பது வெளிப்படையாக தெரிகிறது.